Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy

@ChendurMuruga

Tiruchendur Arulmigu Subrahmanya Swamy @ Tiruchendur Murugan 🙏🙏🙏 திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமண்யசுவாமி @ திருச்செந்தூர் முருகன் 🙏🙏🙏

Vrijeme pridruživanja: listopad 2017.

Tweetovi

Blokirali ste korisnika/cu @ChendurMuruga

Jeste li sigurni da želite vidjeti te tweetove? Time nećete deblokirati korisnika/cu @ChendurMuruga

  1. Prikvačeni tweet

    🙏உலகத் தலைவனுக்கு தீபாரதனை🙏

    Poništi
  2. திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்! தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா! கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா! 🐓🦚

    Poništi
  3. முருகனின் மறுபெயர் அழகு அந்த முறுவலில் மயங்குது உலகு! குளுமைக்கு அவனொரு நிலவு குமரா எனச்சொல்லிப் பழகு! வேதங்கள் கூறிடும் ஒளியே உயர் வேலோடு விளையாடும் எழிலே! 🐓🦚

    Poništi
  4. ஷண்முகநாதா ஷண்முகநாதா ஷண்முகநாதா சரணம்! சரவண பவனே சக்தியின் மகனே ஷண்முகநாதா சரணம்! முத்திரைப் பவுனே வித்தக அறிவே முத்தமிழ் அமுதே சரணம்! மூவிரு முகமே பூவிதழ் மனமே முடிமணி தொழுதோம் சரணம்! 🐓🦚

    Poništi
  5. அடைக்கலம் நீயே வேலய்யா! அருகில் நின்று அருள்புரிவாய் குமரய்யா! அரோஹரா சுவாமியே வேலய்யா! அலையாய் வரம் தருவாய் கந்தய்யா! ஒப்பில்லா மாணிக்கமே வேலய்யா! ஓம் சக்தி ரூபனே குமரய்யா! சஷ்டி நாயகனே வேலய்யா! சடாச்சர மூர்த்தியே முருகய்யா! 🐓🦚

    Poništi
  6. முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே உடல் பற்றிய பிணி ஆறுமே வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே! குமரனைக் கும்பிட்டு கொண்டாடுவோருக்கு குறைகள் யாவும் போகுமே அவர் குடும்பம் தழைத்தோங்குமே! 🐓🦚

    Poništi
  7. ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னை தீர்க்கும் துன்பம் வாராதநிலை தன்னைச் சேர்க்கும் ஐயன் ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னை தீர்க்கும்! 🐓🦚

    Poništi
  8. முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழிகூறும் அழகன் எந்தன் குமரன் என்று மனமொழிகூறும் உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ முருகா உள்ளமெல்லாம் உன்பெயரை சொல்லச்சொல்ல இனிக்குதடா முருகா! 🐓🦚

    Poništi
  9. ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! 🐓🦚

    Poništi
  10. கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே! சிற்பச் சிலையாக நிற்பவனே வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே! உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை! எனை காக்க உனையின்றி யாருமில்லை! முருகா! 🐓🦚

    Poništi
  11. கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழனியிலே! மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்! மரகத வண்ணனாம் திருமால் மருகன்! விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்! வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்! 🐓🦚

    Poništi
  12. ஆடிடும் மயிலும் சேவலின் கொடியும் தேடிடும் விழியில் தேன்மழை பொழியும்! அருள் வடிவாகி ஆறுதல் தருமே ஓமெனும் மந்திரம் ஒலித்திடும் சந்நிதி சுகம்தரும் உன் சந்நிதி! தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி! அதைத் தருவதுதான் முருகா உன் சந்நிதி! 🐓🦚

    Poništi
  13. அழகு தெய்வமாக வந்து பழனி மலைமீதில் நிற்போன்! ஆதிசக்திஅன்னை தந்த பாலன் அசுரர்தம்மை வென்ற வடிவேலன்! நல்ல அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும் அன்பர் வாழவே கருணை செய் குகன்! அரன்உகந்த குருவாம் உயர் சீலன்அவன் அருள்சுரந்தே காக்கும் அனுகூலன்! 🐓🦚

    Poništi
  14. முருகா முருகா என்றால் உருகாதோ! எந்தன் உள்ளம் வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ! சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள்செய்வாய்! செந்தில்மாநகர் வாழும் சுப்ரமண்யா என் தேவாதி தேவனே! 🐓🦚

    Poništi
  15. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்! அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே! அருமறை தேடிடும் கருணை என் கடலே! நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே! நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே! 🐓🦚

    Poništi
  16. சுவாமிமலை சுப்பனுக்கு அரஹரோஹரா! பத்துமலை பிரணவத்துக்கு அரஹரோஹரா! காட்டுமலை வேலனுக்கு அரஹரோஹரா! குண்டுக்கரை குமரனுக்கு அரஹரோஹரா! சிக்கல் சிவபாலனுக்கு அரஹரோஹரா! அரஹரோஹரா சுவாமி அரஹரோஹரா! 🐓🦚

    Poništi
  17. முன்னறியும் முருகனுக்கு அரோஹரா! முக்கண்ணன் மைந்தனுக்கு அரோஹரா! மலைக்குன்று கந்தனுக்கு அரோஹரா! மருதமலை மாமணிக்கு அரோஹரா! தாமரையில் பூத்தவனுக்கு அரோஹரா! தரணி ஆளும் தயாபரனுக்கு அரோஹரா! பொருள் கூறும் புனிதனுக்கு அரோஹரா! 🐓🦚

    Poništi
  18. கண் எனக் காப்பாய் வேல்முருகா! கனிவுடன் பார்ப்பாய் மால்மருகா! களை நீக்கி அருள்வாய் வேல்முருகா! கனவிலும் காண்கின்றேன் மால்மருகா! நெஞ்சில் நிறைந்த சேகரனே! தஞ்சம் புகுகின்றேன் தயாபரனே! 🐓🦚

    Poništi
  19. Poništi
  20. 🙏 செந்தூர் ஸ்ரீ சுப்ரமண்யசுவாமி அன்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏 💐Happy Pongal to all💐 வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே செந்தில்நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை. 🐓🦚

    Poništi
  21. வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா! ஓடிவா அன்பரை நாடிவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா! சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா சிங்கார வேலுடனே ஓடிவா! சிந்தையிலே நினைப்பவரை நாடிவா!

    Poništi

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.

    Možda bi vam se svidjelo i ovo:

    ·